என்னது சூரரைப் போற்று FIRST REVIEW-ஆ..?! பிரபல இயக்குநர் படம் பார்த்தாச்சு.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த சூரரைப் போற்று, லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல இயக்குநர் பாரதி ராஜா சூரரை போற்று திரைப்படம் பார்த்து, கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''திரு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் திரு சூர்யா மிரட்டியுள்ள சூரரைப் போற்று திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் முத்திரை பதிக்கும், தமிழனைப் போற்றும், வாழ்த்துக்கள்.'' என அவர் தெரிவித்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்தின் முதல் ரிவ்யூவ்-ஆக இயக்குநர் பாரதிராஜாவின் வார்த்தைகள் அமைந்துள்ளன. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூரரை போற்று முதல் ரிவ்யூவ் | Suriya's Soorarai pottru gets first review from director

People looking for online information on Bharathiraja, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.