சூரரைப் போற்று தந்த உற்சாகம்.. அடுத்த வேலையில் இறங்கிய சூர்யா.! வெறித்தனமான ஷூட்டிங் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம், அண்மையில் அமேசானில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இதில் சூர்யாவின் நடிப்பு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா தனது அடுத்தப்பட வேலையில் பிசியாக இறங்கியிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும், ஓ.டி.டி படத்திற்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு பயங்கர எனர்ஜியுடன் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இயக்குநர் மணிரத்னம் நவரசா என்ற திரைப்படத்தை நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு தயாரிக்கிறார். இது 9 சிறிய கதைகளை கொண்டு உருவாகவுள்ளது. இதில் ஒரு பகுதியாக சூர்யா நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். மேலும் அண்மையில் சூர்யாவின் புதிய கெட்டப் இந்த பகுதிக்காகதான் என்றும் கூறப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யா நடிக்கும் படத்தின் தகவல் | suriya's next with gautham menon pc sreeran shooting updates here

People looking for online information on Gautham Menon, Mani Ratnam, Navarasa, PC Sreeram, Suriya will find this news story useful.