10 வருடங்களுக்கு பிறகு சூர்யா படத்தில் இணைந்த PAN INDIA இசையமைப்பாளர்.. இவரா? செம்ம!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை நாளை (21.08.2022) அன்று காலை 7 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அகரம் பவுண்டேஷன் அமைந்துள்ள ராமாபுரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுப்ரீம் சுந்தர் பகிர்ந்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத், சிறுத்தை சிவா உடன் ஏற்கனவே அஜித்குமார் நடித்த வீரம் (2014) படத்தில் பணிபுரிந்துள்ளார். சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம், சிங்கம்-2 படங்களில் பணிபுரிந்துள்ளார். கடைசியாக 2013ல் ரிலீசான சிங்கம்-2 படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யாவுடன் பணிபுரிந்தார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Suriya42 Siva Movie Music Director Devi Sri Prasad

People looking for online information on Devi sri prasad, Siva, Suriya42 will find this news story useful.