சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற ஃபைட் மாஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை நாளை (21.08.2022) அன்று காலை 7 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அகரம் பவுண்டேஷன் அமைந்துள்ள ராமாபுரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவில் சண்டைப் பயிற்சி இயக்குனராக தேசிய விருது வென்ற ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் பணிபுரிகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுப்ரீம் சுந்தர் பகிர்ந்துள்ளார்.

முதல் கட்ட படப்பிடிப்பு நாளை மறுநாள் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya42 Siruthai Siva Movie Poojai Stunt Director

People looking for online information on Siva, Supreme Sundar, Suriya, Suriya42 will find this news story useful.