முன்னணி நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது.
இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம்.
இந்த திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த திரு எம் ஜி ஆர், திரு கருணாநிதி, திருமதி வி.என்.ஜானகி செல்வி ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த திரையரங்கிற்கு உள்ளது.
மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த ‘குட்லக் தியேட்டர்’ 40வருடங்களுக்கு பிறகு ‘குட்லக் ஸ்டுடியோஸ்’ என மறு உருவாக்கம் செய்கிறார்கள். ரிக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் வசதியுடன் அமைந்துள்ளது. இதனை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.
தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம்.அப்பாவு எம் எல் ஏ தலைமையில், தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் mla,
மாண்புமிகு பி.கே.சேகர் பாபு , மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில், நடிகர் விஜயகுமார் நல்லாசியுடன், பல திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அவர்கள்,
வரும் 2.4.2023 ஞாயிற்றுகிழமை அன்று குட்லக் ஸ்டூடியோவை துவங்கி வைக்கிறார்.