SARDA : “பத்தவெச்சு பறக்க விட்டுட்டீங்க!” - கார்த்தியின் சர்தார்.. சூர்யாவின் ‘வைரல்’ வாழ்த்து.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது 'சர்தார்' படம்.  முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

Suriya viral wishes for Karthi Starring Sardar releasing Oct 21
Advertising
>
Advertising

இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்த 'சர்தார்' படத்தை, பிரின்ஸ் பிக்சர் பேனரில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ளா. இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

மிலிட்டரியில் 80-ல் ஒரு உளவாளி குழுவை உருவாக்கினார்கள். மிலிட்டரிகாரர்களை உளவாளியாக நடிக்க சொல்லி கொடுத்தார்கள். பிறகு, ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஒரு நடிகரை மிலிட்டரிகாரராக மாற்றிவிட்டால் என்ன என்று யோசித்தார்கள். அதன்படி ஒரு நாடக நடிகரை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து உளவாளியாக மாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்த விஷயத்தை மையமாக வைத்து சர்தார் திரைப்படம் உருவாகியுள்ளது. 

Suriya viral wishes for Karthi Starring Sardar releasing Oct 21

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த நடிகர் சூர்யா, “பெரிதளவில் கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர். வலுவான ஒரு கதையே தனக்காக பேசும்!!.. பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க” என்று தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இப்படம் குறித்து படவிழாவில் கார்த்தி பேசும்போது, “இயக்குநர் மித்ரன் கதை கேளுங்கள். இந்த கதைக்கு இரட்டை பாத்திரம் தேவைப்படுகிறது என்று கூறினார். கதைக் கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது. அனைத்து நடிகர்களின் வாழ்க்கையிலும் இது மாதிரி ஒரு காதபாத்திரம் நிச்சயம் வரும். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் காலத்திலும் வந்திருக்கிறது.

ரஜினி சார், கமல் சார் காலத்திலும் நடந்திருக்கிறது. அண்ணனும் அயன் படத்தில் பல்வேறு வேடங்களில் தோன்றினார். அவருக்கு எல்லாம் பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம்.” என குறிப்பிட்டிருந்தார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya viral wishes for Karthi Starring Sardar releasing Oct 21

People looking for online information on Karthi, Sardar, Suriya will find this news story useful.