#NAVARASA: இந்தா வந்துருச்சுல்ல டீசர்! நவரசா.. நெட்ஃபிளிக்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த மாஸ் செய்தி ஒன்று ஒருவழியாக வந்துவிட்டது.

9 அற்புதமான கதைகளுக்கு, 9 திறமையான இயக்குநர்களுடன் மணி ரத்னம் ஒரு காவியத் தொகுப்பை தயாரித்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆம், 9 இயக்குநர்கள் இயக்கும் நவரசாவின் புதிரான டீசர் மற்றும் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த படங்கள் கோபம், இரக்கம், தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி மற்றும் வியப்பு அல்லது ஆச்சரியம் ஆகிய  ‘நவ(ஒன்பது) ரசங்களை’ (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டவை.

பிரியதர்ஷன், கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், பிஜோய் நம்பியார், ரதீந்திரன் பிரசாத், அரவிந்த் சுவாமி (அறிமுக இயக்குநராக), வசந்த்.எஸ்.சாய் மற்றும் சர்ஜுன் கே.எம் ஆகியோர் இந்த படத்தொகுப்பை இயக்கியுள்ளனர்.

இந்த நவரசா படத்தொகுப்பில் சூர்யா, அரவிந்த் சுவாமி, விஜய் சேதுபதி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், சரவணன், பிரசன்னா, சிம்ஹா, ரேவதி, பார்வதி, பிரயாக மார்டின் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கான்செப்ட் டீசரில், இப்படத்தின் முக்கிய நடிகர்கள் வெவ்வேறு ரசங்களை வெளிப்படுத்துகின்றனர். மேற்படி திரைப்படம், வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி-யில் ஒளிபரப்பாக உள்ளது.

ALSO READ: "சூர்யா-வை தனிநபர் என மிரட்ட வேண்டாம்.. எங்கள தாண்டி தான் நெருங்க முடியும்!".. சீமான் அதிரடி!

ALSO READ: “டேய்.. சாவடிச்சிடுவேன்.. ”.. திலீப்குமார் குறித்த கமெண்ட். கடுமையாக சாடி சித்தார்த் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Vijay Sethupathi Navarasa 9 directors Teaser Netflix

People looking for online information on Arvind Swami, Gautham Menon, Mani Ratnam, Navarasa, Netflix, Siddharth, Suriya, Teaser, Trending, Vijay Sethupathi will find this news story useful.