BREAKING: தேசிய விருது பெற்ற சூப்பர் ஹிட் பட இயக்குநருடன் இணையும் சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'சூரரைப் போற்றறு' படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் 'காட்டுப்பயலே' பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி வாசல் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் அவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் தகவல் ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு நிச்சயம் சர்பரைஸாக இருக்கும்.

ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கியுள்ள 'பசங்க 2', 'கடைக்குட்டி சிங்கம்' படங்களை தயாரித்துள்ள சூர்யா, 'பசங்க 2' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டுப் பிள்ளை' படங்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya team up with director Pandiraj for his next | பிரபல தேசிய விருது பெற்ற இயக்குநருடன் இணையும் சூர்யா

People looking for online information on Pandiraj, Sun pictures, Suriya will find this news story useful.