சூர்யாவின் சூரரைப் போற்று பற்றிய புதிய தகவல்..! - மாறா இப்போ ஆக்‌ஷனுக்கு ரெடி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் குறித்து முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertising
Advertising

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்மருக்கு வெளியாவதாக இருந்து சூரரைப் போற்று, கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி போனது. 

இந்நிலையில் படத்தை பற்றிய புதிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்திற்கு சென்சாரில் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு, சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் சூர்யா, விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று படத்தை பற்றிய புதிய தகவல் | suriya sudha kongara's soorarai pottru censor report is out

People looking for online information on Censor, GV Prakash Kumar, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.