ஜெய்பீம் பட VIDEO: ஆஸ்கார் விருது கமிட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

Advertising
>
Advertising

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளார்.

ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார்.இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இச்சம்பவம் வடதமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

சில தினங்களுக்கு முன் ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சி இடம் பெற்றது. முதன்முதலாக தமிழ் படங்களில் ஜெய்பீம் படத்தின் காட்சி தான் ஆஸ்கார் யூடியூப்பில் இடம் பிடித்தது பற்றி பலரும் பாராட்டினர் . மேலும் 94 வது ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் ஜெய்பீம் இடம் பிடித்தது. சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் ஜெய்பீம் போட்டியிட உள்ளது.  இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் 276 படங்களில் ஒரு படமாக ஜெய்பீம் இடம் பெற்றது. இந்நிலையில் ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சி இடம் பெற்றது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. 

5000 அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து தான் ஜெய்பீம் பட வீடியோ ஆஸ்கார் யூடியூப் சேனலில் இடம் பெற்றது என டிவிட்டரில் சில கருத்துக்கள் பரவின. இது குறித்து நம்பகமான ஆதாரங்களின் படி, சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் எந்தவொரு வீடியோ சமர்ப்பிப்பிற்கும் கட்டணம் செலுத்துவது கட்டாயச் செயலாகும், ஆனால் ஒவ்வொரு வீடியோவின் தரத்தையும் மதிப்பாய்வு செய்த பிறகு பதிவேற்ற ஆஸ்கார் குழு முடிவு செய்யும். பணம் செலுத்தி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வீடியோ கிளிப்களும் இடம்பெறாது. தகுதி உடைய தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் மட்டுமே இடம் பெறும். எனவே பணம் செலுத்தப்பட்டது உண்மைதான். பணம் செலுத்த வேண்டும் என்பது ஆஸ்கார் கமிட்டியின் விதிமுறையாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெய்பீம் பட VIDEO: ஆஸ்கார் விருது கமிட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன? முழு தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya starring jai bhim oscars controversy Truth Revealed

People looking for online information on Academy Awards, ஆஸ்கார் விருது, சூர்யா, ஜெய்பீம், Jai Bhim, Oscars, Suriya will find this news story useful.