"உண்மைலயே வந்துருச்சாயா?" - "ஆமாயா.." - தேசிய விருது .. சூர்யா & சுதா பேசிக்கொண்டது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் மத்திய அரசு சார்பில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

Suriya Soorarai Pottru Sudha Kongara national award reaction
Advertising
>
Advertising

தமிழிலும் பல படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ் குமார்) என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

Suriya Soorarai Pottru Sudha Kongara national award reaction

“முதல் விருது ஜி.விக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது. அருமையான தருணம் அது. விருது கிடைத்தது பற்றி நானும் சூர்யாவும் பேசிக்கொண்டது, எப்போதும் போல மிகவும் கேஷூவலானது. ‘சூர்யா.. நிஜமாவே வந்துருச்சாயா? என்னால நம்ப முடியல’ என்றதும் பதிலுக்கு ‘ஆமாயா’ என்றதும் அவ்வளவுதான், ‘ஹேப்பி பர்த்டே’ என்றேன். அப்படிதான் பேசிக்கொள்வோம். நிஜமாகவே விருது வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

சூரரை போற்று ஏர்போர்ட்டில் டிக்கெட்டை வாங்கிக்கொள்ள சொல்லி கெஞ்சும் எமோஷனல் காட்சியை படமாக்கும்போது, மானிட்டர்ல பார்த்துட்டு இருக்கும்போது நான் அழுதேவிடுவேன். அவர் மீண்டும் நடிக்க தயாராக இருந்தாலும், நான் தேவைப்பட்டால் தான் அடுத்த டேக் போவேன். மிகவும் அரிதாகவே ஒன் மோர் டேக் போவோம்.” என்று குறிப்பிட்டார்.

"உண்மைலயே வந்துருச்சாயா?" - "ஆமாயா.." - தேசிய விருது .. சூர்யா & சுதா பேசிக்கொண்டது என்ன? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Soorarai Pottru Sudha Kongara national award reaction

People looking for online information on 2D Entertainment, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.