சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. மோஷன் போஸ்டர் எப்போ? மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா & சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Ponniyin Selvan : "அருண்மொழி வர்மனாக கமல்.. வந்தியத்தேவனாக ரஜினி" - அப்பவே சொன்ன சிவாஜி

'சிறுத்தை' சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும்   "சூர்யா 42" படத்தின் படப்பிடிப்பு   lavish hotel செட் அமைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கடந்த (ஆகஸ்ட் 24, 2022) தேதி இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
‘சூர்யா 42’ என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், Studio Green நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது. இப்படத்தினை  K.E.  ஞானவேல்ராஜா, மிகப் பெரிய பான்-இந்திய வெற்றி திரைப்படங்களில் சிலவற்றைத் தயாரித்த  UV Creations வம்சி-பிரமோத்  உடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கின்றனர். 

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூர்யா 42 படத்தில் 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அவர் சமீபத்திய பான்-இந்தியன் பிளாக்பஸ்டர் 'புஷ்பா' உட்பட பல சூப்பர் ஹிட் ஆல்பங்களை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, மிலன் கலை இயக்கம் செய்கிறார்.  சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகள்  அமைக்கிறார், ஆதி நாராயணா திரைகதை எழுத, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை (09.09.2022) காலை 10 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பும் நாளை மோஷன் போஸ்டருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் நடிகை சாய் பல்லவி.. கூட இந்த நடிகை வேற இருக்காங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Siva Suriya 42 Movie Motion Poster Release Update

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya 42 Movie, Suriya 42 Movie Motion Poster will find this news story useful.