BREAKING: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? வேறமாரி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'.. கேரள உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

பின்னர் நடிகர் அஜித் நடிப்பில் விஜயா புரொடக்ஷன்ஸின் நிறுவனர் நாகி ரெட்டியின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, வீரம் திரைப்படம் தயாரானது. 2014 பொங்கலுக்கு (10.01.2014) வீரம் படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை குவித்த படங்களில் பட்டியலை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் 2015-ஆம் ஆண்டு கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டது.

அதில் தமிழக சினிமாவில் அந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் முதலிடம் லிங்கா விற்கும் இரண்டாவது இடம் வீரம் திரைப்படத்திற்கும்  அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2015 தீபாவளிக்கு வெளியானது வேதாளம். அதற்கு முன்பு வரை இருந்த தமிழ் சினிமாவின் ஓபனிங் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள் அனைத்தையும் வேதாளம் படம் முறியடித்தது.  பின்னர் அஜித் & இயக்குனர் சிவா கூட்டணியில் மூன்றாவது விவேகம், நான்காவதாக விஸ்வாசம் படங்கள்  வெளியாகின. 2019 பொங்கலுக்கு (10.10.2019) ரிலீஸ் ஆன விஸ்வாசம் ஆல் டைம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | Twitter-ல புது DP மாத்துன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதான் காரணமா?

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Siruthai Siva new movie to start in 10 days

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya Siruthai Siva new movie will find this news story useful.