நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
![Suriya shares karthik comment on his long hair jaibhim exclusive Suriya shares karthik comment on his long hair jaibhim exclusive](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/suriya-shares-karthik-comment-on-his-long-hair-jaibhim-exclusive-new-home-mob-index.jpg)
த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ படம் ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். பழங்குடியின தம்பதியரின் வாழ்வியலை பேசும் இந்த படத்தில் கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் நடிக்க, சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மாஸ் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு நடிகர் சூர்யா பிரத்தியேக நேர்காணல் அளித்திருக்கிறார். இதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட சூர்யா, “நான் பொதுவாகவே நீளமாக முடி வளர்ப்பது இல்லை. பிறந்ததிலிருந்தே இப்படித்தான். கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்துக்காக நீளமாக முடி வளர்த்துக் கொண்டிருந்தான்.
அவனிடம் நான் சும்மா முடி வளர்ப்பதாக சொன்னேன். அவன் அவனை பார்த்து நானும் முடி வளர்க்குறேனா என்று கேட்டான். அந்த நேரத்தில் ஞானவேல் ராஜா அழைத்தார். ஜெய் பீம் படத்தில் சந்துரு எனும் வக்கீல் கேரக்டர் அப்படி இருப்பதாக வரைந்து வைத்திருந்தார் இயக்குநர்.
அதை பார்த்ததும், நான் கார்த்தியிடம் கூறினேன். அவன் மீண்டும் டேய் என்றான். உண்மையில் நான் திட்டமிடவில்லை.. கதைப்படி இருப்பது இப்படித்தான் என்று கூறினேன். இப்படி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். சூர்யா பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.