சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Also Read | ஆந்திரா & தெலங்கானாவில் மாஸ் காட்டும் கமலின் ‘விக்ரம்’… இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?
சூர்யாவின் நந்தா, பிதாமகன்…
சூர்யாவின் ஆரம்பகால திரையுலக வாழ்வில் அவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தவை பாலாவின் நந்தாவும், பிதாமகனும், இந்த இரு படங்களிலும் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. அது ரசிகர்களிடம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. நந்தாவில் கோபமான முரட்டு இளைஞன் வேடம் என்றால் பிதாமகனில். நந்தாவுக்கு நேர் எதிரான நகைச்சுவை ததும்பும் பாத்திரத்தில் இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து அவரின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொண்டு வந்தார் பாலா. இடையில் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்திலும் நடித்திருந்தார்.
மீண்டும் இணைந்த கூட்டணி….
இயக்குநர் பாலா இயக்கத்தில் கடைசியாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷும், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
முதல் கட்டப் படப்பிடிப்பு…
இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதையடுத்து அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் “கன்னியாகுமரியில் 34 நாட்கள் நடந்த 1வது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அடுத்த 15 நாட்கள் ஷெட்யூல் விரிவான செட் வேலைகளுக்குப் பிறகு ஜூன் மாதம் தொடங்குகிறது” என்று அறிவித்திருந்தனர். ஆனால் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும், அதனால் படப்பிடிப்பு முன் கூட்டியே முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் மறுத்திருந்தது.
சூர்யாவின் வைரல் Tweet
இந்நிலையில் தற்போது சூர்யாவின் டிவீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாலாவோடு ‘சூர்யா 41’ படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் “மீண்டும் படப்பிடிப்புத் தளத்துக்கு செல்ல காத்திருக்கிறேன். #suriya41” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த டிவீட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | “விஷ்ணு படத்துல சேர்ந்து பாடிய ஹிட் Song”… விஜய் அம்மா ஷோபாவின் இந்த வார குட்டி ஸ்டோரி!