"சில்லுக்கருப்பட்டி" இயக்குநரின் முந்தைய படங்களில் இதை கவனித்தீர்களா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் " சில்லுக்கருப்பட்டி". அன்பு என்ற ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு, வெவ்வேறு கதைகளை தொகுத்து உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 'பூவரசம் பீப்பி' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ஹலிதா ஷமீம் இத்திரைப்படத்தை இயக்கினார்.

இதையடுத்து, தனது அடுத்தபடம் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஹலிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  தனது அடுத்த படத்தின் பெயர் 'ஏலே' எனவும், அதில் பணிபுரியும் தொழில்நுட்ப குழு பற்றியும் அவர் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாகவும் அவர் தனது குறிப்பிட்டுள்ளார். ஒய்நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் இத்திரைப்படத்தை தயாரிக்க, ஓரம்போ, விக்ரம் வேதா படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஜோடி, க்ரியேட்டிவ் ப்ரொடியூசர்களாக பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் தனது முந்தைய படங்களான பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில், ஏலே படத்தை பற்றி இயக்குநர் குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பூவரசம் பீப்பி படத்தின் ஒரு காட்சியில், ஏலே என எழுதப்பட்டிருக்கும் ஐஸ் வண்டி இடம் பெறுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரை போலவே, சைக்கிளில் ஐஸ் டப்பா இருக்க, அதில் ஏலே என எழுதியிருக்கிறது. அதே போல அண்மையில் வெளியான சில்லுகருப்பட்டி படத்தில், மணிகண்டனிடம் அவரது காதலி 'ஏலே' படம் எப்போ பார்க்கலாம்.? என மெசேஜ் அனுப்புகிறார்.

ஹாலிவுட் இயக்குநர் குயின்டின் டாரன்டினோ, தனது அடுத்த படத்தை பற்றி முந்தைய படத்தில் பேசியிருப்பது பலரும் அறிந்த ஒன்றே. அதே போல தன் முந்தைய படங்களில், தனது ஏலே படத்தை குறிக்கும் வகையில் ஹலிதா ஷமீம் அமைத்திருக்கும் காட்சிகள், ரசிகர்களுக்கு அவர் மீது மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்சினிமாவின் எதிர்ப்பார்க்கப்படும் இயக்குநர் ஆகியிருக்கிறார் ஹலிதா.

Suriya, Samuthirakani's sillukarupatti director Halitha Shameem gives clue of her next film previously

People looking for online information on Aelay, Halitha Shameem, Poovarasam Peepee, Samuthirakani, Sillu Karupatti Tamil, Sunaina will find this news story useful.