''டாப் ஸ்டாராக இருந்தும்...'' - சூர்யா குறித்து பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் கடந்த மே 31 ஆம் தேதி வெளியான படம் என்ஜிகே. செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ மோகன் பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், மோகன் பாபு சார், உங்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் மேன்மையானவராக சிறந்த ஒழுக்கத்துடன் திகழ்ந்தவர் நீங்கள். 500 படங்களுக்கு மேல் நடித்து எங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்.  உங்களுடன் அனுபவ ரீதிாக கற்றுக்கொள்ள முடிந்தது. சூரரைப் போற்று படத்தில் பங்கு பெற்றதற்கு நன்றி. என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த மோகன் பாபு, உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சூர்யா. இந்த தலைமுறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரா இருந்து உங்கள் ஒழுக்கமும், தன்மையான நடவடிக்கையும் ஷூட்டிங் உங்கள் சிறந்த குணநலன்களை படப்பிடிப்பு தளம் பேசுகிறது.  உங்களுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பில் உங்களுடன் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் இளம் நண்பரே. என்று குறிப்பிட்டுள்ளார்.

Suriya praised Mohan Babu for GV Prakash's Soorarai Pottru

People looking for online information on Mohan Babu, Soorarai Pottru, Suriya will find this news story useful.