இயக்குனர் ஹரியின் ஸ்டூடியோஸ் திறப்பு விழா.. அமைச்சர்களுடன் நடிகர் சூர்யா.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன்  திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர்.

Suriya inaugurates Director Hari Good Luck Studios
Advertising
>
Advertising

தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ, தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாண்புமிகு பி.கே.சேகர் பாபு, மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

Suriya inaugurates Director Hari Good Luck Studios

புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர்  மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார். மற்றும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ். முருகராஜ், கார்த்திக் சந்தாணம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஶ்ரீதர், நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் கார்த்திக் ராஜா, இயக்குனர் அலெஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஶ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்களை டைரக்டர் ஹரி, ப்ரிதா ஹரி வரவேற்றனர்.

முன்னணி நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும்.  குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த திரு எம் ஜி ஆர், திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, திருமதி ஜானகி ஆகியோருடன் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த திரையரங்கிற்கு உள்ளது.

மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தான்
இபொழுது 'குட்லக் ஸ்டூடியோஸ்' எனும் பெயரில் சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகிறது.  இதனை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.

Tags : Suriya, Hari

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya inaugurates Director Hari Good Luck Studios

People looking for online information on Hari, Suriya will find this news story useful.