"எனது குரு பாலா அண்ணன்".. "18 வருஷம் இந்த நாளுக்கு தான்".. சூர்யா நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாலாவும் சூர்யாவும் மீண்டும் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

சூர்யாவுக்கு திருப்புமுனை கொடுத்த பாலாவின் படங்கள்
திரையுலகில் சூர்யாவுக்கு திருப்பு முனைப் படமாக அமைந்த படம் நந்தா. சேது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தில் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. அது ரசிகர்களிடம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. நந்தாவுக்குப் பிறகு பாலா சூர்யா - விக்ரமை வைத்து இயக்கிய படம் பிதாமகன். நந்தாவுக்கு நேர் எதிரான நகைச்சுவை ததும்பும் பாத்திரத்தில் இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து அவரின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொண்டு வந்தார் பாலா.

குறிப்பாக சூர்யா, ரயில் புடவை விற்கும் காட்சி மற்றும் லைலாவோடு லங்கர் கட்டை உருட்டும் காட்சி எல்லாம் இன்றளவும் பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் பின்னர் பாலா தயாரிப்பில்  சிங்கம்புலி இயக்கத்தில் மாயாவி படத்தில் நடித்தார் சூர்யா. இடையில் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நான்காவது முறையாக பாலா சூர்யா கூட்டணி இப்போது புதிய படத்தில் இணைய உள்ளதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகி கொண்டு இருந்தன.

18 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கூட்டணி…

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடைசியாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் இன்று சூர்யா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ’18 ஆண்டுகளாக எனது குரு பாலா அண்ணன் ஆக்‌ஷன் சொல்ல காத்திருந்தேன். இன்று அது நடந்ததில் மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் வேண்டும்’ எனக் கூறி சூர்யா 41 பட அறிவிப்பையும், இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

கதாநாயகி

சமீபத்தில் சூர்யா பாலா இணையும் இந்த படத்தின்  மற்றக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் கதாநாயகி பற்றிய முக்கியமான அப்டேட் ஒன்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக உப்பென்னா என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அப்படி அவர் நடிக்கும் பட்சத்தில் தமிழில் அவரின் அறிமுகப்படமாக இந்த படம் அமையும்.  முதல் படமே இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா என முன்னணிக் கலைஞர்களின் படமாக அமையும்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Suriya happy about acting in bala direction after 18 years

People looking for online information on Bala, Suriya, Suriya 41 will find this news story useful.