அனிருத் - GVP குரலில் ரிலீசான சூர்யா நடிக்கும் 'ET' படத்தின் பட்டைய கிளப்பும் SINGLE பாடல் LYRIC VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

Advertising
>
Advertising

இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் வா டா தம்பி எனும் முதல் சிங்கிள் பாடல்  இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது. இந்த பாடலை இமான் இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அனிருத் - ஜிவி பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு பாபா பாஸ்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இத வீடியோவில் வரும் புதிய ஸ்டில்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த படத்தின் முதல் லுக் வீடியோ  ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சஸ்பென்ஸாக இரசிகர்களை ஆச்சர்யப்படுத்த ஜூலை 23 மதியம் ஒரு மணிக்கு 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாகியது. போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.  சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிருத் - GVP குரலில் ரிலீசான சூர்யா நடிக்கும் 'ET' படத்தின் பட்டைய கிளப்பும் SINGLE பாடல் LYRIC VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya ET Movie 1st Single Vaa da Tambi Song Released

People looking for online information on Anirudh, எதற்கும் துணிந்தவன், சூர்யா, ET, Etharkum Thuninthavan, GV Prakash, Imman D, Suriya, Vaa Da Tambi will find this news story useful.