‘ஜெய் பீம்’ படத்துக்கு நியாயம் சேர்த்த சூர்யா!.. முதல்வரை சந்தித்து நெகிழ்ச்சி செயல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த தீபாவளியை முன்னிட்டு ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

Advertising
>
Advertising

2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மாதம் ஒரு படம் என அடுத்தடுத்து 4 திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி வருகின்றன. அவ்வகையில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் செப்டம்பர் மாதமும், உடன்பிறப்பே திரைப்படம் அக்டோபர் மாதமும் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் சூர்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, சூர்யா நடித்துள்ளார். இதேபோல், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும்  கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி  வழங்கபட்டது. இந்த நிதியை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.

த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெய் பீம் திரைப்படம், நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya donates fund to CM MK Stalin Jai Bhim connect

People looking for online information on 2D Entertainment, Amazon Prime Video, Jai Bhim, Jyotika, MKStalin, Suriya, Tha.Se.Gnanavel will find this news story useful.