‘விக்ரம்’-க்குப் பிறகு மீண்டும் ஒரு CAMEO… எந்த படத்தில் தெரியுமா? சூர்யா வெளியிட்ட மாஸ் UPDATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா தற்போது சூரரைப் போற்று ரீமேக்கில் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Advertising
>
Advertising

Also Read | “லோகேஷ்க்கு கார்…. சூர்யாவுக்கு ரோலக்ஸ்… உங்களுக்கு என்ன Gift..?” அனிருத் சொன்ன செம்ம பதில்

விக்ரம் வெற்றி…

சமீபத்தில் ரிலீஸான  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.. படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

ரோலக்ஸ்…

சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. படத்தின் வெற்றிக்கு சூர்யாவின் கடைசி நேர ஸ்பெஷல் எண்ட்ரியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த வேடத்தில் கலக்கிய சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மேலும் விக்ரம் 3 மற்றும் கைதி 2 ஆகிய படங்களில் மீண்டும் ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறுமா என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சூரரைப் போற்று ரீமேக்

இந்நிலையில் நடிகர் சூர்யா இப்போது மீண்டும் ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆன சூரரைப் போற்று திரைப்படம் தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தையும் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில்தான் சூர்யா இப்போது ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமான அவரது டிவீட்டில் “சுதா கொங்கரா - உங்கள் கதை மீண்டும் அழகாக உயிர்பெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் படக்குழுவோடு இருந்த ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சி. இந்தி சூரரைப் போற்று படத்தில் விரிவான ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன்.” எனக் கூறி அக்ஷய் குமாரோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Also Read | ஷாருக் கானுடன் ‘இசைப்புயல்’ AR ரஹ்மான்… ARR அமீன் பகிர்ந்த வைரல் photo… குவியும் லைக்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya doing a cameo role in hindi soorarai portu

People looking for online information on Hindi soorarai portu, Suriya, Suriya doing a cameo role will find this news story useful.