BREAKING: சூர்யா - பாலா இணையும் 'வணங்கான்'.. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போ? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா - பாலா இணையும் படத்தின் ஷூட்டிங் குறித்த‌ தகவல் கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அஜித் நடிக்கும் AK61.. படத்தில் இணைந்த பிரபல யூடியூப் நடிகை! வைரல் BTS போட்டோ!

கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. பின்னர் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான வர்மா திரைப்படத்தை இயக்கினார்.

அடுத்து பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும்.

இப்படத்திற்கு தமிழில் வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் 'அச்சாலுடு' என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநராக மாயப்பாண்டியும், எடிட்டராக  சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.

கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் வணங்கான் படத்தின் அடுத்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு, நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் "சூர்யா 42" படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆரம்பமாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. வணங்கான் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு "சூர்யா 42" படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | BREAKING: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? வேறமாரி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Bala Vanangaan Movie Shooting Update

People looking for online information on Bala, Suriya, Vanangaan Movie, Vanangaan Movie Shooting Update will find this news story useful.