18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
Also Read | தளபதி 66 படத்துக்காக ஹைத்ராபாத்தில் விஜய்.. மாஸ் வீடியோவுடன் வெளியான சூப்பர் அப்டேட்!
தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் மார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.
நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.
டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ அறிமுகமாகிறார். இவர் சூப்பர் சரண்யா, கோகோ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 2017ல் வேணுகோபாலின் சர்வோபரி பாலக்கரன் படத்தில் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவாவில் (2021) அல்போன்சாவாகவும், கோ கோவில் (2021) அஞ்சுவாகவும், சூப்பர் ஷரண்யாவில் (2022) சோனாவாகவும் நடித்து புகழ் பெற்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. சூர்யா திருவள்ளுவர் சிலையை பார்ப்பது போல அந்த புகைப்படம் அமைந்தது.
இந்நிலையில் படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. சூர்யா-பாலா படம் சீராகவும் திறமையாகவும் நடந்து வருகிறது என இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் 34 நாட்கள் நடந்த 1வது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அடுத்த 15 நாட்கள் ஷெட்யூல் விரிவான செட் வேலைகளுக்குப் பிறகு ஜூன் மாதம் தொடங்குகிறது என்றும் அறிவித்துள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநராக மாயப்பாண்டியும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8