இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்துவருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்னா பாலமுரளி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள் கம்போஸிங் பணி முடிவடைந்து விட்டதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். மேலும் முதன் முறையாக தனக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அனைத்து பாடல்களையும் வழங்கிய இசையமைப்பாளர் நீங்கள் தான் என சூர்யா பாராட்டியதாகவும் Behindwoods TVக்கு அளித்த பேட்டியில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்துக்கு தற்போது 'சூரரைப் போற்று' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து வருகிறார்.
மேலும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படத்தில் இருந்து தண்டல்காரன் என்ற பாடல் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.