“சில கதாபாத்திரங்கள் நம் மனதில்…. “ ‘கார்கி’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாயபல்லவி நடிக்கும் கார்கி படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 25 நாளுக்குப் பிறகும் கேரளாவில் மாஸ் காட்டும் ‘விக்ரம்’… விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் Tweet

சாய்பல்லவி

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். ஆனால் பிரேமம் திரைப்படம் அவரை தென்னிந்திய மொழி ரசிகர்கள் மத்தியில் சாய்பல்லவியை பிரபலமாக்கியது. அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பு, சிரிப்பு, ஹேர் ஸ்டைல், டான்ஸ் என பலவற்றுக்காகவும் அவரை பிடித்திருந்தாலும் சில குறிப்பிட்ட ரசிகர்களுக்கு சாய் பல்லவியின் கன்னத்தில் இருக்கும் முகப்பருக்கள் ஸ்பெஷலானவையாகவே குறிப்பிட்டு பிடிக்கும் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்.

கார்கி

சமீபத்தில் சாய்பல்லவி, நானியுடன் நடித்த ஷ்யாம் சிங்காராய் படமும், அதில் சாய் பல்லவியின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றன. இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் உருவாகும் ’கார்கி’ என்ற படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.  சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிட்டனர். இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 மற்றும் ஜெய்பீம் படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனமும் BLACKY GENIE & MY LEFT FOOT PRODUCTION நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் சாய்பல்லவி பற்றிய தன்னுடைய பதிவில் “ நான் சில மாதங்களாக இந்த படத்தைப் பற்றி பேசவேண்டும் என காத்திருந்தேன். கடைசியில் என் பிறந்தநாளில், எங்களின் படக்குழு படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உங்களிடம் ‘கார்கி’ யை அறிவிக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

சூர்யா & ஜோதிகா

இந்நிலையில் இன்று ‘கார்கி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சூர்யா “நானும் ஜோதிகாவும் கார்கி படக்குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். சில கதாபாத்திரங்கள் நம் மனதில் அப்படியே நிலைபெற்றுவிடும். புதிய எழுத்துகள் மற்றும் எண்ணங்கள் கொண்டாடப்படவேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

Also Read | 25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘டைட்டானிக்’… அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 3 ஜேம்ஸ் கேமரூன் படங்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya and jyothika associated with gargy movie

People looking for online information on Gargy movie, Jyothika, Sai Pallavi, Suriya will find this news story useful.