"இன்னைக்கு 'TREND' ஆகுற விஷயத்த அன்னைக்கே அவரு பண்ணிட்டாரு.." ஷங்கரை புகழ்ந்த சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நேற்று (04.08.2022) நடைபெற்றது.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: "இது தான் கமல் சார் கொடுத்த ரோலக்ஸ் ‌வாட்ச்".. ரசிகர்களிடம் கை காட்டி சொன்ன சூர்யா!

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’வி0ருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், விருமன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை  மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில்  நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, "மதுரையில் பல கதைகள் இருக்கிறது. கற்பனை கதையல்ல, நிஜத்தில் நடந்த கதையை சுவாரசியமாக கூறுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்த இயக்குனர் இமயம் ஆக முடியும் என்று பாரதிராஜா அங்கிள் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் நமக்கு மிகப்பெரிய அடையாளம். அது மட்டுமே அவருடைய சாதனை அல்ல. அவரைப் போன்று கிராமத்திலிருந்து வந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையாக இருந்திருக்கிறார்" என்றார்.

பின்னர் ஷங்கர் பற்றி பேசிய சூர்யா, "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நான் எந்த வட்டத்திற்குள்ளும் மாட்ட மாட்டேன் என்று தன்னுடைய உயரம், புகழ், பெயரை மீண்டும் மீண்டும் மறுவரையறைப் படுத்திக் கொண்டே இருப்பவர் ஷங்கர் சார் தான். அப்போதே பான் இந்தியா படத்தை கொண்டு வந்தவர் இவர். 30 வருட காலமாக தொடர்ந்து சாதனைப் புரிவது சாதாரணமானது அல்ல. இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது" என கூறினார்.

Also Read | 'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் 'வாடிவாசல்' பற்றி பேசிய சூர்யா.. வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya about director shankar achievements in viruman audio launch

People looking for online information on Shankar, Suriya, Viruman Audio Launch, Viruman Movie will find this news story useful.