லோகேஷ் CINEMATIC UNIVERSE-ல டில்லியும் ரோலக்ஸூம் மோத வாய்ப்பிருக்கா? சூப்பரான மேட்டரை சொன்ன சூர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’.

Advertising
>
Advertising

Also Read | திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை.. வைரல் ஃபோட்டோ!

இந்தப் படத்தை நடிகர் சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று  நடந்தது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.

இந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, "கார்த்திக்கு முன்பே நான் நடிக்க வந்து இருந்தாலும், என்னை விட அதிகமாக சினிமாவைப் பற்றி பேசுவதும், செயல்படுவதும் கார்த்தி தான் என்று வெளிப்படையாக எந்த மேடையிலும் கூறுவேன். சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி. யுவன் கார்த்தி இருவருமே என்னுடைய தம்பிகள். அவர்கள் இருவரும் சினிமாவிற்கு செய்த பதிவை யாராலும் மறக்க முடியாது. என்னை விட பல மடங்கு அவர்களை கொண்டாடுவார்கள். பல விருதுகளை பெறுவார்கள்.

என் மகளுடைய படிப்பிற்காக 40 நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். அப்போது தேசிய விருது கிடைத்ததை நான் தெரித்துக் கொள்ள மூன்று மணி நேரம் ஆனது. அதற்குள்ளேயே நீங்கள் கொண்டாடினீர்கள். அதை உங்களுடைய விருதாக பார்த்தீர்கள். கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடக்கூடிய ஊர் மதுரை. இந்த ஊரில் உங்கள் முன்பு விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடுவதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். எப்போதும் உங்களுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும்.

டில்லியும் ரோலக்ஸும் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

Also Read | 'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் 'வாடிவாசல்' பற்றி பேசிய சூர்யா.. வைரல் வீடியோ!

லோகேஷ் CINEMATIC UNIVERSE-ல டில்லியும் ரோலக்ஸூம் மோத வாய்ப்பிருக்கா? சூப்பரான மேட்டரை சொன்ன சூர்யா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

‍ Suriya about acting with Karthi in lokesh Kanagaraj Cinematic Universe LCU

People looking for online information on Karthi, Lokesh Kanagaraj, Suriya, Viruman, Viruman Movie Audio Launch will find this news story useful.