சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட பரபர அறிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மாலத்தீவில் அமலாபால் வேற லெவல் போட்டோஷூட்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

"வலிமை மிகு வீரம்" எனும் அடைமொழியுடன்  டைட்டில் அமைந்தது.

மிகப்பெரும் பட்ஜெட்டில்  உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார்.  இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.  இந்த படத்தின் எடிட்டராக பிரபல மலையாள சினிமா எடிட்டர் நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை திஷா பட்டாணி இணைந்துள்ளார்.
கோவாவில் 250 பவுன்சர்களுடன் சூர்யா சண்டையிடும் அதிரடி சண்டைக்காட்சி படமாக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்ட அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரத்திலும் நடிகர் சூர்யாவே நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்!!!!எங்களின் வரவிருக்கும் தயாரிப்பின் படப்பிடிப்புத் தொகுப்புகளில் இருந்து "வீடியோக்கள் மற்றும் படங்களை" சிலர் பகிர்வதை நாங்கள் கவனித்தோம்.#சூர்யா42, ஒவ்வொரு வேலையும் முழு குழுவின் இரத்தத்தையும் வியர்வையும் உள்ளடக்கியது.

இந்த திரைப்படத்தை அனைவருக்கும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவமாக வழங்க விரும்புகிறோம். வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை நீங்கள் நீக்கினால்/அகற்றினால் அது ஒரு சிறந்த உதவியாக இருக்கும், மேலும் எதிர்காலத்தில் இதைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து அவ்வாறு செய்பவர்கள் மீது 'பதிப்புரிமை மீறல்' நடவடிக்கை எடுக்கப்படும்.- டீம் சூர்யா42" என அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Also Read | திரையுலகுக்கு பேரிழப்பு.. அனிருத் -தின் தாத்தா... இசையமைப்பாளர் & இயக்குனர் SV ரமணன் மறைவு.!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 42 Movie Studio Green Statement Regarding Shooting

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya 42 Movie, Suriya 42 Movie Updates will find this news story useful.