மாஸா சண்டை செய்றாங்களே.. SURIYA 42 நாயகி திஷா பட்டானி பகிர்ந்த தெறி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனுஷ் குரலில் இளையராஜா இசையில்.. வெளியான விடுதலை படத்தின் முதல் சிங்கிள் பாடல்..!

இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது.
இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு (21.08.2022) அன்று  அகரம் பவுண்டேஷனில்  நடந்தது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி துவங்கியது.   இந்த படத்தின் கோவா படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது.  இந்த படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திஷா பட்டாணி,  தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தமது பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சியில் திஷா பட்டானி ஈடுபட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகை சமந்தாவும் இந்த வீடியோ பதிவுக்கு "The Real Deal" என உத்வேகம் அளிக்கும் கமெண்ட்டை பதிவு செய்துள்ளார். சில ரசிகர்கள் இந்த பதிவில் 'சூர்யா 42' என்றும் பதிவிட்டுள்ளனர்.

Also Read | "சகோதரிகள்".. மகளுடன் குஷ்பு இருக்கும் PHOTO-க்கு நடிகை அதிதி ராவ் & DD போட்ட வைரல் கமெண்ட்!

மாஸா சண்டை செய்றாங்களே.. SURIYA 42 நாயகி திஷா பட்டானி பகிர்ந்த தெறி வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 42 Movie Actress Disha Patani lastest training video

People looking for online information on Disha Patani, Suriya, Suriya 42 Movie will find this news story useful.