"நீதி வென்றதா? .. ANITHA விஷ பாட்டில்.. SURESH ஓட்ட வாய்".. ஆடியோ LEAK பண்ண போறாரா? #BBULTIMATETAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossUltimate: டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

Advertising
>
Advertising

பிக்பாஸ் அல்டிமேட்

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுள் தான் தற்போது சுரேஷ் தாத்தா என அழைக்கப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகியுள்ளார்.

Also Read: "ஹார்டின் போடலனு இப்படி பண்றாங்க"... தேம்பி அழும் ஜூலி.. என்னப்பா நடக்குது பிக்பாஸ் வீட்ல..

“நீதி வென்றது” - அனிதா

இதனை அடுத்து, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அனிதா முன்னதாக “நீதி வெல்லும்” என எழுதிவைத்ததாகவும், சுரேஷ் வெளியே போன பிறகு  “நீதி வென்றது” என மாற்றி எழுதியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நீதி வென்றது என அனிதா எழுதியிருப்பது முறையல்ல என்றும் பாலாஜி மற்றும் சினேகன் இருவரும் பேசிக்கொள்கின்றனர்.

சுரேஷ் ஓட்ட வாய்.. விஷ பாட்டில் அனிதா..

அதன்படி சுரேஷ் தாத்தா கொஞ்சம் ஓட்ட வாய் என்றாலும் கெடுதல் நினைக்க கூடியவர் அல்ல என சினேகனும், நீதி வெல்லும் என ஒருவர் போன பிறகு எழுதினால் என்ன அர்த்தம், விஷ பாட்டில் என்பது சரியாக தான் இருக்கு என பாலாஜியும் பேசிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக அனைவருக்கு வாக்கு அடிப்படையில் பட்டங்கள் கொடுக்கப்பட்டன. அப்போது அனிதாவுக்கு விஷ பாட்டில் எனும் பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.

அனிதாவின் விமர்சனம்..

முந்தைய சீசன்களில், ஒரே சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் முட்டிக்கொண்டது மிகவும் பிரபலம்.

இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும், அனைவரது ஸ்ட்ராட்டஜி பற்றி பேசிய அனிதா சம்பத், "ஒருவருக்கு ஆபத்து நேரத்தில் அவரை காப்பாற்றாமல், காப்பாற்றுங்கள் என கத்தி அனைவரையும் வரவழைத்து, ஒருவேளை அந்த நபர் காப்பாற்றப்பட்டால், கத்தியது தான் தான், தன்னால் தான் அந்த நபர் காப்பாற்றப்பட்டார் என பெருமை தட்டிக் கொள்ளும் ரகம் தான் சுரேஷ் சக்ரவர்த்தி!" என குறிப்பிட்டிருந்தார்.

ஆடியோ கிளிப்களை வெளியிடுவாரா சுரேஷ்?

இதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி கொஞ்சம் டென்ஷன் ஆனார். இதனிடையே அனிதாவின் சில ஆடியோ கிளிப்களை வெளிவிடுவதாக கூறியதாகவும் 24 மணி நேர எபிசோடினை பார்த்தவர்கள் பேசிகொள்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் தமிழ் நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: முகத்துக்கு நேரா முதல் Open நாமினேஷன்! அத்தனை பேரும் சொன்ன அந்த 2 பேர்!

தொடர்புடைய இணைப்புகள்

Suresh said will leak anitha audio clip bigg boss ultimate

People looking for online information on Bigg Boss Ultimate will find this news story useful.