கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இந்தியாவில் கொரோனா அதனுடைய வேலையை காண்பித்து வருகிறது.
இதனிடையே வில்லன் நடிகர் சோனு சூட், நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ என்பதை இந்த கொரோனா காலம் புரிய வைத்திருக்கிறது.
இதற்கு காரணம் அவருடைய செயல்கள் தான். தொடர்ச்சியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு உதவி செய்தது முதல் ஐடி நிறுவனத்தில் இருந்து வேலை பறிபோன இளம் பெண்ணுக்கு உதவி செய்தது உட்பட பல வகையிலும் சோனு சூட் தன்னால் இயன்ற பண உதவிகளையும் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுக்கு துணை நின்றும் வருகிறார்.
இதனை அடுத்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மீரட்டில் உள்ள தம்முடைய ஆண்டிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்ததுடன், அவருக்கு 65 வயது அவர் கொரோனாவால் மருத்துவமனையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார் என்றும் கூறி மற்றும் சில விவரங்களை குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத்தை ட்வீட் செய்திருந்தார்.
இதனை ரீட்வீட் செய்த சோனு சூட். “எனக்கு விபரங்களை அனுப்புங்கள் பாய் .. நான் ஏற்பாடு செய்கிறேன்!” என்று பதிலளிக்க உடனடியாக இதற்கு நன்றி சொன்ன சுரேஷ் ரெய்னா உங்களுக்கு விபரங்களை அனுப்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். பின்னர் இன்னும் 10 நிமிஷத்துல ஆக்ஸிஜன் சிலிண்டர் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரீச் ஆகிவிடும் என ட்வீட் செய்துள்ளார் சோனு சூட். இதற்கு ரெய்னா மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்கள் வைரலாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
ALSO READ: பாண்டு, கோமகனைத் தொடர்ந்து மற்றுமொரு பிரபலம் மரணம்... மீளா சோகத்தில் திரையுலகம்!