'கோப்ரா' படத்தின் டிரெய்லரை பாராட்டிய சுரேஷ் ரெய்னா.. உற்சாகமான இர்பான் பதான்! வைரல் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் டிரெய்லரை சுரேஷ் ரெய்னா பாராட்டி உள்ளார்..

Advertising
>
Advertising

Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. இர்ஃபான் பதான் பகிர்ந்த வைரல் BTS போட்டோ!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’.

இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள்.

‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். 

இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் டிரெய்லர் & இர்ஃபான் பதானை பாராட்டி சுரேஷ் ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில், "கோப்ரா டிரெய்லரில் அண்ணன் இர்ஃபான் பதானின் நடிப்பை பார்த்ததில்  மிகவும் மகிழ்ச்சி. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் நிரம்பிய படம் போல் தெரிகிறது, இதில் உங்களுக்கும் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்" என கூறியுள்ளார்.

 

Also Read | Cobra Trailer: அடடே.. விக்ரம் நடிக்கும் கோப்ரா.. டிரெய்லர்ல மதுரை முத்துவ கவனிச்சீங்களா..?

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Raina about Vikram Cobra Trailer and Irfan Pathan

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Cobra Trailer, CobraFromAug31, Irfan Pathan, Suresh Raina, Vikram will find this news story useful.