பிக்பாஸ் நான்காம் சீசன் எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே பலரும் சந்தேகப் பார்வையுடன் பார்த்த ஒருவர் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆனால் இன்று லட்சக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார். வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் கேப்ரியல்லாவுக்காக தனி ஆளாக நின்று, கடைசிவரை போராடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த Free Eviction Pass போட்டியின்போது சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு வார்த்தை சொன்னார். இந்த பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம், அதாவது சிலர் மட்டும் ஒன்றுகூடி மற்றவர்களை ஒதுக்கும் பழக்கம் இருக்கிறது என்று தெரிவித்தார். இதற்கு ரியோ போன்ற மற்ற போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் புரோமோவின் போட்டோவை ரசிகர்கள் வெளியிட்டு "இதைப் பற்றி தான் சுரேஷ் சக்ரவர்த்தி அன்றைக்கே புலம்பினார். இது ஒன்று போதாதா பிக்பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸம் இருக்கிறது என்பதை காட்ட என்று தெரிவித்து வருகின்றனர்.
