AK62-க்கு பின் அஜித்தின் பைக் சுற்றுப்பயணம்.. மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வைரல் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | KABZA படத்திற்காக.. செல்ல மகளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரேயா.. வைரல் போட்டோஸ்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. 

Images are subject to © copyright to their respective owners.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு  (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது." என சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார்.

Also Read | பாடகி பிரகதி வாங்கிய புதிய விலையுயர்ந்த கார்.. விலை எவ்வளவு? இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?!

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Chandraa tweet about Ajithkumar world tour after AK62

People looking for online information on Ajith Kumar, AK62, Suresh Chandraa will find this news story useful.