உப்புமூட்டை டாஸ்க்கில் கேப்ரியலாவை தூக்கிக்கொண்டு நின்ற சுரேஷ் சக்கரவர்த்திக்கு சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. என்னால முடியல தாத்தா என பாதியிலேயே விலகிய கேபி, சுரேஷை கட்டிப்பிடித்து கண்கலங்கிய காட்சி நெகிழ்ச்சி அளித்தது. டாஸ்க் முடிந்ததும் கட்டிலில் சுரேஷ் படுத்திருக்க கேபி, பாலாஜி, ஆஜித், சம்யுக்தா ஆகிய நான்கு பேரும் அவரை சுற்றி இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது கையில் ஆயின்மெண்ட்டுடன் வந்த அர்ச்சனா அதை சுரேஷ் கையில் தடவி லேசாக பிடித்து விட்டார். அர்ச்சனா அப்படி செய்யும்போது வலி பொறுக்காமல் சுரேஷ் கண்கலங்க அதைப்பார்த்து சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பதறிப்போயினர். கேப்ரியலா அழவே ஆரம்பித்து விட்டார். ஆனால் அந்த சூழ்நிலையிலும் காலைல இருப்பேனோ இல்லையோ? என சுரேஷ் ஜோக்கடித்தார். தொடர்ந்து அவருக்காக கிச்சன் சென்ற கேப்ரியலா அவருக்கு வெந்நீர் காயவைத்து கொண்டு வந்து கொடுத்தார்.
சிறிது நேரத்திலேயே சுரேஷ் நார்மல் மோடுக்கு வந்து விட்டாலும் அவ்வளவு வலியையும் பொறுத்துக்கொண்டு அவர் கேப்ரியலாவை உப்புமூட்டை தூக்கியது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகுபலி என அவரை புகழ்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.