நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் வேல்முருகன், ரியோ ராஜ், கேப்ரியலா மூவரும் போட்டியிட்டனர். இதில் ரியோ, வேல்முருகனுக்கு பெருவாரியான ஆதரவு கிடைக்க, கேப்ரியலாவுக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவு அளித்தார். இதையடுத்து அவர்களை யாராவது முதுகில் உப்புமூட்டை சுமக்க வேண்டும் என பிக்பாஸ் கட்டளை இட்டார்.
இதில் யார் அதிக நேரம் நேரம் தாக்குப்பிடித்து நிற்கிறார்களோ அவர்கள் சுமந்திருக்கும் நபரே வெற்றியாளர் என்றும் அவர் தெரிவித்தார். பாலாஜியின் முதுகில் ரியோவும், ஆரியின் முதுகில் வேல்முருகனும் ஏறிக்கொண்டனர். ஆனால் சுரேஷ் வயதானவர் என்பதால் அவர் முதுகில் ஏற கேப்ரியலா தயங்கினார். இதைப்பார்த்த சுரேஷ் அவருக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். எனினும் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேபி இறங்கி விட்டார்.
வேல்முருகன் மீது கைவைத்திருந்த ரேகா தெரியாமல் கையை எடுத்ததால் ரியோ ராஜ் வரும் வாரத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஆரி, பாலாஜி இருவரும் 1 மணி நேரம் தாக்கு பிடித்தனர். அதே நேரம் சுரேஷும் 8.41 நிமிடங்கள் இந்த போட்டியில் நீடித்தார். ஒருவேளை கேபி இறங்காமல் இருந்திருந்தால் அவர் இன்னும் சக போட்டியாளர்களுக்கு சவால் அளித்திருப்பார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயசாச்சுன்னு யாருப்பா சொன்னது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.