அவரை வெளியே 'அனுப்புனதுக்கு' இதுதான் காரணமா?... கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுரேஷ் சக்கரவர்த்தி ஏன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்? என்பது தான் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது. சுரேஷே தன்னை அனுப்பும்படி கேட்டதாகவும், அதனால் தான் அவரை வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் ரசிகர்களால் இந்த வெளியேற்றத்தை தாங்க முடியவில்லை போல. விளையாடாம நெறைய பேரு உள்ள இருக்காங்க அவங்கள விட்டுட்டு எங்க தாத்தாவ ஏன் அனுப்பி வச்சீங்க? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

வேறு சிலரோ சுரேஷ் சமையலில் செம எக்ஸ்பர்ட். அதனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொல்வதற்கு தான் அவரை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தெரிவிக்கின்றனர். எது எப்படியோ உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இனி சுரேஷ் தாத்தா போல யாராலும் கண்டெண்ட் கொடுக்க முடியாது என்பது மட்டும் உண்மை!

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Chakravarthy evicted from Bb House, Twitter Reacts

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.