BREAKING: அண்ணாத்த படத்திற்காக களமிறங்கிய ரஜினி! அண்ணாத்த படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது.

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரான ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதனை முன்னிட்டு ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பிரியதர்ஷனின் Four Frames Sound கம்பெனியில் 'அண்ணாத்த' படத்தின் டப்பிங்கிற்காக களமிறங்கியுள்ளார்.

சென்னையில் உள்ள இந்த போஃர் ஃப்ரேம்ஸ் சவுண்ட் கம்பெனி 1998 இல் நிறுவப்பட்டது, இப்போது இந்தியாவின் முதல் S4 ஒலி அமைப்பு இங்கு தான் உள்ளது. இது இந்தியாவில் உள்ள மிகவும் மேம்பட்ட டால்பி அட்மோஸ் ஒலி நிலையங்களில் ஒன்றாகும்.

தொடர்புடைய இணைப்புகள்

Superstar rajinikantha annatthe movie next update

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.