"ஏன்னா அவர் சூப்பர் ஸ்டார்..!".. எங்கேயும் ரஜினியிஸம்..! செம ட்ரெண்டிங் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பேருந்தில் நடத்துனராக இருந்த சிவாஜி ராவை சினிமாவுக்கு அழைத்து வந்து அவரை ரஜினிகாந்தாக மாற்றி அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் பாலசந்தர். முன்னதாக பேருந்தில் கண்டக்டராக இருக்கும் போதே அனைத்து வேலைகளையும் ஸ்டைலாக செய்து வந்ததால் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் ராஜ்ஜியம் செய்து வரும் ரஜினிகாந்த்தின் இடத்தை வேறு எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. இன்று வரை தொடர்ந்து நம்பர் 1 நடிகராக தான் அவர் இருந்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | திடீரென தீ விபத்துக்குள்ளான நடிகை கனகா வீடு.! என்ன நடந்தது? முழு தகவல்.!

இந்திய அளவிலும் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த்தின் பெரிய ப்ளஸ்ஸே அவர் அனைத்து விஷயங்களையும் ஸ்டைலாக செய்வது தான். அவரது நடை, வசனங்கள் பேசுவது, டான்ஸ், சண்டைக் காட்சிகள், காமெடி என அனைத்து விஷயங்களிலும் யாரிடமும் இல்லாத ஒரு ஸ்டைல் இருந்து கொண்டே இருக்கும். அது தான் அவரை இத்தனை ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அரியணையில் அசைக்க முடியாத நடிகராக உயர்த்தி வைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இதற்கு முன்பாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு அவரது கதாபாத்திர பெயரான "முத்துவேல் பாண்டியன்" என குறிப்பிட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டிருந்தது. மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை மற்ற பல நடிகர்களுடன் ஒப்பிட்டு வைரலாகி வரும் வீடியோ, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் ஒரு பக்கம் ரஜினிகாந்த் பல ஸ்டைல்களை செய்து கொண்டே இருக்க, மறுபக்கம் அதே ஸ்டைலை மற்ற பல நடிகர்கள் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதில், விஜய், அஜித், ஜாக்கிசான், ஷாருக்கான், சூர்யா, தனுஷ், சிம்பு, யஷ், பாலகிருஷ்ணா, நாகசைதன்யா, ஜூனியர் என்டிஆர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிறைய இடங்களில் ரஜினிகாந்தை பின்பற்றுவது போல காட்சிகள் ஒப்பிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் தொடங்கி ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் வரை ரஜினிகாந்தை பின்பற்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ, தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.  மேலும், “இதனால் தான் அவர் இந்தியாவின் சூப்பர்ஸ்டார்” என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

ட்ரெண்ட் ஆகும் அந்த வீடியோ இணைப்பு: 

https://fb.watch/hAfEh0fAbv/?mibextid=2Rb1fB

Also Read | பிரபல பாண்டவர் இல்லம் சீரியல் நடிகையின் வளைகாப்பு.. கணவர் குறித்து நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth Style Rajinism is in everywhere

People looking for online information on Rajini Style, Rajinikanth, Rajinism will find this news story useful.