''என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறாங்க...'' - ரஜினிகாந்த் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு செய்தது ஆகியவற்றை கொண்டாடும் விதமாக மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டது.

Superstar Rajinikanth speaks about BJP and Thiruvalluvar Issue

அதன் படி நேற்று (நவம்பர் 7) தன் குடும்பத்தினருடன் பரமக்குடி சென்ற கமல்ஹாசன் தனது தந்தை D.சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் தன் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நிகழ்வின் 2 ஆம் நாளான இன்று தனது திரையுலக குருவான பாலசந்தரின் திருவுருவச் சிலையினை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திறந்து வைத்தார். அப்போது உடன் வைரமுத்து, கே.பாலச்சந்திரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, மணிரத்னம், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், நாசர், ரமேஷ் அரவிந்த், இயக்குநர் சந்தான பாரதி, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இந்நிலையில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவரிடம் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், நீண்ட நாட்களாக பிஜேபி கலர் பூச முயற்சிக்கின்றனர். திருவள்ளுவருக்கு காவி பூசுவது மாதிரி.  திருவள்ளுவரும் மாட்டமாட்டாரு. நானும் மாட்டமாட்டேன் என்று அறிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth speaks about BJP and Thiruvalluvar Issue

People looking for online information on BJP, Rajinikanth, Thiruvalluvar will find this news story useful.