கோவாவின் பானாஜி நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ‘கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இந்திய சினிமாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த படைப்புகளும், கலைஞர்களும் கவுரவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 50வது சர்வதேச திரைப்பட விழாவினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இன்று முதல் இந்த விழா 28ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் திரையிடப்படும் 26 படங்களில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவில் நீண்ட காலம் சேவை செய்ததற்கான உயரிய விருது வழங்கப்படுகிறது. இன்று மாலை கோவாவில் திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திர்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
இவ்விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் "என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி" என கூறினார். மேலும், இந்த விருதினை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு விருதை சமர்ப்பிப்பதாகவும், மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர், கோவா முதல்வர்,எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சனுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.