சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்! இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்த சிக்னல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

superstar rajinikanth next with director pandiraj ?
Advertising
>
Advertising

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்தது. இந்த படம் வெளிவந்து மூன்று வாரங்களே ஆன நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தனது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

superstar rajinikanth next with director pandiraj ?

இந்நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து திரும்பி தற்போது ஓய்வில் உள்ளார். ரசிகர்கள் மத்தியிலும் ரஜினியின் அடுத்த படம் பற்றிய அப்டேட்க்கு காத்திருக்கின்றனர். இது குறித்து ரசிகர் ஒருவர் டிவிட்டரில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக டிவீட் செய்துள்ளார். இதை இயக்குனர் பாண்டிராஜூன் லைக் செய்துள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்  'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தின் கதாநாயகி பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Superstar rajinikanth next with director pandiraj ?

People looking for online information on Pandiraj, Rajinikanth will find this news story useful.