'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஜட்டின் சர்நா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து 'விஸ்வாசம்' இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது . இந்நிலையில் இதற்கு முன்பாக ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் நேற்று(அக்டோபர் 13) காலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 நாட்கள் அங்கு தங்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உத்தரரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்கு இன்று காலை சென்றுள்ளார். அப்போது அங்கிருப்பவர்களுடன் ரஜினிகாந்த் டுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.