மாநாடு படம் பார்த்து SJ சூர்யாவுக்கு CALL செய்த ரஜினி! என்ன சொன்னார் தெரியுமா? முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

V ஹவுஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் மாநாடு.

Superstar Rajinikanth appreciates Maanaadu movie SJ Suriyah
Advertising
>
Advertising

Time Loop பாணியில் அமைந்துள்ள இந்த படம்  (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். 

Superstar Rajinikanth appreciates Maanaadu movie SJ Suriyah

சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் குறிப்பாக சிம்புவிற்கு இந்த படம் மைல்கல்லாக அமையும் என்றும், வெங்கட்பிரபுவின் இயக்கம் திரைக்கதை, யுவனின் இசையை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினி மாநாடு படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட்பிரபுவை தொலைபேசியில் அழைத்து சிம்புவுக்கும், வெங்கட்பிரபுவுக்கும் வாழ்த்து சொல்லியதாக டிவீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 

இந்நிலையில் S J சூர்யாவுக்கு போன் செய்து ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். இது குறித்து டிவீட் செய்த நடிகர் S J சூர்யா," ரஜினியின் அழைப்பு இந்த 10 வருடத்தில் மிகச்சிறந்த தருணம் என்றும், ரஜினியின் பாராட்டு தனது திரைவாழ்வில் ஊக்கத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth appreciates Maanaadu movie SJ Suriyah

People looking for online information on Maanaadu, Rajinikanth, Sj suriyah will find this news story useful.