சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்! புதிய மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்ற மாதம் ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இந்த படத்தின் டீசரானது சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் காலை 9.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த படத்தை அடுத்தாண்டு (2022) மஹாசங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் நாள் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவிட் வைரலாகியுள்ளது. அதில் படத்தின் டீசரை பார்த்துவிட்டு தனது மூளை பரவசமாகிவிட்டதாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் நாளை காலை 9.09 மணிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் யூடியூப் தளத்தில் வெளியாகிறது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Superstar maheshbabu birthday srkaru vaari patta teaser

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu will find this news story useful.