ஐத்ராபாத்: நடிகர் விஜய் பட கதாநாயகி தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் மீண்டும் ஜொடி சேர உள்ளார்.
வலிமை முதல் BEAST வரை.. தற்செயலா? திட்டமிடலா? 'செம்ம PLAN' ரசிகர்களுக்கும் தியேட்டர்களுக்கும் HAPPY!
தெலுங்கில் ராஷிகா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம், மகேஷ்பாபு நடிப்பில் `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்ற ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தை அடுத்தாண்டு (2022) பொங்கல் மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. பின் படத்தின் வெளியீடு மே 12,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
பூஜா ஹெக்டே கோலிவுட்டில் விஜய்க்கு ஜோடியாக, நெல்சன் திலீப்குமாரின் பீஸ்டில் நடித்து வருகிறார், தெலுங்கில் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸூடன் நடித்துள்ளார். பூஜா அடுத்ததாக சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், ஹாரிகா மற்றும் ஹாசின் கிரியேஷன்ஸின் எஸ் ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) தயாரிக்கின்றனர்.
தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் கலை இயக்குநராக இருக்கும் போது ஆர்.மதி கேமராவைக் கையாளப் போகிறார். ஜெர்சி படத்திற்காக தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக உள்ளார். சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு பற்றிய புகைப்படங்களுடன் வெளியாகி உள்ளது.
வித்தியாசமான கான்செப்ட் கொண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும் இப்படம் இன்று ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் முறையான பூஜையுடன் தொடங்கப்பட்டது. வழக்கமாக தனது திரைப்பட வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளாத மகேஷ் பாபு பூஜை விழாவைத் தவிர்த்துவிட்டார்.
பூஜா ஹெக்டே, நம்ரதா மகேஷ் பாபு கிளாப்போர்டு அடிக்க, சுரேஷ் சுக்கப்பள்ளி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார்.
SSMB28 இன் வழக்கமான படப்பிடிப்பு ஏப்ரல், 2022 முதல் தொடங்குகிறது.
40 YEARS OF மூன்றாம் பிறை:சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய போட்டியை அறிவித்த பாலு மகேந்திரா நூலகம்!