VIDEO: அண்ணாத்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்! குஷ்பு, மீனா கூட ரஜினி டான்ஸ்! செம ட்ரீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அக்டோபர் 4 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு ஏற்கனவே அண்ணாத்த அண்ணாத்த எனும் முதல் சிங்கிள் பாடல் ரிலீசானது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் சாரக்காற்று பாடல், அக்டோபர் 9 அன்று வெளியாகியது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் மருதானி இன்று 18.10.2021 வெளியாகி உள்ளது. 

இந்த பாடலை இமான் இசையில் அந்தோனி தாசன், வந்தனா சீனிவாசன், நாகஸ் உடன் இணைந்து இமானும் பாடியுள்ளனர். பாடலாசிரியர் மணி அமுதவன் பாடல்களை எழுதி உள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ நடுவில் ரஜினி, குஷ்பு, மீனா ஆடிய நடன காட்சியும் இடம் பெற்றுள்ளது. 

VIDEO: அண்ணாத்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்! குஷ்பு, மீனா கூட ரஜினி டான்ஸ்! செம ட்ரீட்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Annaatthe third single marudhani song released

People looking for online information on D Imman, Keerhy Suresh, Kushbu, Meena, Rajinikanth, Siva will find this news story useful.