தல அஜித்தின் வலிமை படத்துடன் மோதும் பவன் கல்யாண் நடிக்கும் மாஸ் படம்! வெளியான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என உருவாகி வருகிறது.

Super Update valimai vs PSPK next Bheemla Nayak release date
Advertising
>
Advertising

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். நாகவம்சி தனது சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். ரவி கே சந்திரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

Super Update valimai vs PSPK next Bheemla Nayak release date

இந்த படம் (பொங்கல்) மஹாசங்கராந்திக்கு ஜனவரி 12 அன்று வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது, இதனை தற்சமயம் படக்குழு மீண்டும் உறுதி செய்தது. இன்று புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் வலிமை படமும் பொங்கல் அன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது, பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படமும் பொங்கல் அன்று  வெளியாவது குறிப்பிடத்தக்கது.

வலிமை படக்குழு படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 33 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Super Update valimai vs PSPK next Bheemla Nayak release date

People looking for online information on Bheemla Nayak, Valimai will find this news story useful.