அஜித்தின் வலிமை படத்தில் இருந்து., யாரும் எதிர்ப்பார்க்காத விஷயம்..!! - என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து பிரபல நடிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங், ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. 

இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து தெலுங்கு சினிமா நடிகர் கார்த்திகேயா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று பிறந்தநாளை கொண்டாடிய இவருக்காக, அஜித் ரசிகர்கள் ஸ்பெஷலாக டிபி வடிவமைத்து அசத்தினார்கள். இதை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்திகேயா, ''எனது பிறந்தநாளன்று பெரும் அன்பை பொழிந்த அஜித் ரசிகர்களுக்கு எனது நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க எதிர்ப்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வர போகுது'' என அவர் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. நடிகர் கார்த்திகேயா வலிமை படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அஜித்தின் வலிமை பட தகவல் வருகிறது | Super update coming on ajith h vinoth's valimai ft karthikeya

People looking for online information on Actor Karthikeya, Ajith Kumar, Valimai will find this news story useful.